உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை கொலை வழக்கில் சிறுவர் உட்பட 8 பேர் கைது

மானாமதுரை கொலை வழக்கில் சிறுவர் உட்பட 8 பேர் கைது

மானாமதுரை : மானாமதுரை அருகே கிருங்காகோட்டை பாப்பாமடையில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் சிறுவர் உட்பட 8 பேரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர்.மானாமதுரை அருகே உள்ள கிருங்காங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கலைவாணன் 30,பழனி 55, மற்றும் மானாமதுரை அருகே உள்ள கீழமேல்குடி கிராமத்தைச் சேர்ந்த உதயக்குமார் மகன் மருது 20, 3 பேரும் கிருங்காகோட்டை பாப்பாமடையில் பேசிக்கொண்டிருந்த போது அங்கு ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஒன்று மேற்கண்ட 3 பேரையும் வெட்டியதில் மருது பலியானார்.கலைவாணன் மற்றும் பழனி ஆகியோர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த மானாமதுரை போலீசார் முருக பாஞ்சான் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் விக்னேஸ்வரன் 23, ராஜகம்பீரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி மகன் விஜய் 21, பாப்பாமடை கிராமத்தை சேர்ந்த வேலுமணி மகன் பாலாஜி 21, மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த போஸ் மகன் ராம கிருஷ்ணன் (எ) ராமர் 20, கண்ணுச்சாமி மகன் மணிமூர்த்தி 19,மதுரை ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் துளசிராம் 21, பிச்சை பிள்ளையேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் அழகர் 21, மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை