உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட ஏலம்சிவகங்கை நகராட்சி முன் கூட்டத்தால் பாதிப்பு

இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட ஏலம்சிவகங்கை நகராட்சி முன் கூட்டத்தால் பாதிப்பு

சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் நடந்த பொது ஏலம் நிர்வாக காரணங்களுக்காக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு மதியம் 2:30 மணிக்கு துவங்கியது. ஏலம் எடுப்பதில் போட்டி நிலவியதால் இரவு வரை நடந்தது.சிவகங்கை நகராட்சி பகுதியில் உள்ள வாரச்சந்தையில் கட்டணம் வசூலித்தல், தெருவோர தினசரி கடைகளில் கட்டணம் வசூல், பஸ் ஸ்டாண்ட் நுழைவு கட்டணம், டூவீலர் ஸ்டாண்ட் கட்டணம், கழிவறை கட்டணம் உள்ளிட்ட 16 இனங்களுக்கான ஏலம் நேற்று நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. காலை 11:00 மணிக்கு துவங்க வேண்டிய ஏலம் நிர்வாக காரணத்திற்காக இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு மதியம் 2:30 மணிக்கு ஆரம்பித்தது. மூன்று ஆண்டு உரிமைக்கான இந்த ஏலத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால் நகராட்சி அலுவலகம் முன்பு கூட்டம் அதிகமாக காணப்பட்டது.சில ஒப்பந்ததாரர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நகராட்சி அலுவலகத்திற்குள் ஒப்பந்ததாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு ஏலம் நடந்தது. நேற்றிரவு வரை தொடர்ந்து ஏலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி