உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  விடுதிகளில் உணவு முறைகேட்டை தடுக்க பயோமெட்ரிக் பொருத்தும் பணி துவக்கம்

 விடுதிகளில் உணவு முறைகேட்டை தடுக்க பயோமெட்ரிக் பொருத்தும் பணி துவக்கம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு சமூகநீதி மாணவ மாணவியர் விடுதிகளில், முறைகேடுகளை தடுக்க பயோமெட்ரிக் கருவி பொருத்தும் பணி நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவ, மாணவியர் விடுதிகள் உள்ளன. விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை முறைகேடாக காட்டுவது, கூடுதல் உணவு தொகை பெற்று முறைகேடு செய்வது உள்ளிட்ட புகார் எழுந்தது. முதற்கட்டமாக ஆதி திராவிட நலத்துறை விடுதிகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது. அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் உட்பட அனைத்து பள்ளி கல்லூரி சமூகநீதி விடுதிகளில், பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தும் தற்போது தொடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 42 பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் விடுதிகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்தும் பணி நடந்து வருகிறது. அதிகாரிகள் கூறுகையில்: பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் விடுதிகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. விடுதிகளில் உணவு உண்ணும் மாணவர்கள் எண்ணிக்கையில் பல்வேறு குழப்பம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தது. இதனை முதலில் கண்டறியவே பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் கைரேகை, முகப்பதிவு மூலம் பதிவு செய்யப்படும். தொடர்ந்து, மாணவர்கள், பணியாளர்கள் வருகைப் பதிவும் பயன்பாட்டிற்கு வரலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி