உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சமூக நல விடுதி மூடல் 150 மாணவர்கள் தவிப்பு

 சமூக நல விடுதி மூடல் 150 மாணவர்கள் தவிப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான சமூக நல விடுதி மூடப்பட்டதால் சிரமப்படுகின்றனர். சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 44 சமூக நல விடுதிகள் செயல்பட்டன. ஒவ்வொரு விடுதியிலும் 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி வந்தனர். அரசு மாணவர்களின் எண்ணிக்கையை உறுதி செய்ய வருகை பதிவேட்டை நிறுவியது. ஏராளமான விடுதிகளில் 20 க்கும் குறைவான மாணவர்களே வருகை இருப்பதை கண்டறிந்து 20 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள சமூக நல விடுதிகளை மூட அரசு உத்தரவிட்டது. சூராணம், மல்லல், பாகனேரி, இளையான்குடி, சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு குடியிருப்பு, மானாமதுரை, கண்டரமாணிக்கம் ஆகிய 7 சமூக நல விடுதிகள் மூடப்பட்டது. மூடிய விடுதிகளில் தங்கி படித்த மாணவர்களை அருகில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இயங்கும் சமூக நல விடுதியில் இணைத்து விட்டனர். மூடப்பட்ட 7 சமூக நல விடுதிகளை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளி, கல்லுாரிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை