உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அனைத்து துறை அதிகாரிகள் புறக்கணிப்பு நடவடிக்கைக்கு கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

அனைத்து துறை அதிகாரிகள் புறக்கணிப்பு நடவடிக்கைக்கு கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

மானாமதுரை - மானாமதுரை ஊராட்சி ஒன்றிய கூட்டத்திற்கு தொடர்ந்து வராமல் இருக்கும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.மானாமதுரை ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் லதா அண்ணாதுரை தலைமையில் நடந்தது துணைத்தலைவர் முத்துசாமி வரவேற்றார்,பி.டி.ஓ.,லுாயிஸ் ஜோசப் பிரகாஷ், மேலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:ருக்மணி அ.தி.மு.க., கவுன்சிலர்: ராஜகம்பீரம் பகுதியில் மயானத்திற்கு செல்லும் ரோட்டை சீரமைக்க வேண்டுமென்று பலமுறை கூறியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.சோமசுந்தரம் அ.தி.மு.க., கவுன்சிலர்: வெள்ளிக்குறிச்சியில் நுாலக கட்டடம் விரைவில் கட்ட வேண்டும், துணை சுகாதார நிலையத்திற்கு கடந்த 6 மாதமாக செவிலியர்கள் வராத காரணத்தினால் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.முத்தனேந்தல் வட்டார மருத்துவ அலுவலர் கண்ணன்: வெள்ளிக்குறிச்சி துணை சுகாதார நிலையத்திற்கு வாரந்தோறும் புதன்கிழமை செவிலியர் வந்து செல்கிறார். விரைவில் நிரந்தரமாக செவிலியர் பணியிடம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.முருகேசன், இ.கம்யூ.,கவுன்சிலர்: கீழப்பசலையில் செல்லும் மின் கம்பி மிகவும் தாழ்வாக செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. ஊராட்சி ஒன்றிய கூட்டத்திற்கு தொடர்ந்து வராமல் இருக்கும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பி.டி.ஓ., லூயிஸ் ஜோசப் பிரகாஷ்: அரசு அதிகாரிகளுக்கு முறையாக கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. வராத அதிகாரிகள் குறித்து மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அடுத்த கூட்டங்களில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி