உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  போதிய மழை இல்லாததால் கல்லல் அருகே கருகும் பயிர்

 போதிய மழை இல்லாததால் கல்லல் அருகே கருகும் பயிர்

காரைக்குடி: கல்லல் அருகே போதிய மழை இல்லாமல் பயிர்கள் கருகி வரும் நிலையில் மழை பெய்தால் மட்டுமே பயிரைக் காப்பாற்ற முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கல்லல் வட்டாரத்தில் 4 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வாண்டு, தொடர் மழையை நம்பி கடந்த மாதம் விவசாயிகள் நெல் விதைப்பில் ஈடுபட்டனர். உழவு உரம் என ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்து விவசாய பணி மேற் கொண்டு வருகின்றனர் மானாவாரி விவசாயமே அதிக அளவில் நடைபெறுகிறது. பயிர் வளர்ந்து வரும் நிலையில், விவசாயிகள், களைக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தொடர்ந்து மழை இல்லாததால் பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகிறது. விவசாயிகள் கூறுகையில்: கண்மாய் மூலமே விவசாயம் நடைபெறுகிறது. மழையை நம்பி விவசாய பணியில் ஈடுபட்டோம். உழவுப் பணி முடித்து நெல் விதைப்பில் ஈடுபட்டோம். பயிர்கள் வளரத் தொடங்கியுள்ளன. களைக்கொல்லி மருந்து தெளித்த நிலையில் மழை இல்லை. இதனால், பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகிறது. தொடர் மழை பெய்தால் மட்டுமே பயிரை காப்பாற்ற முடியும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை