உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சான்று வழங்குவதில் தாமதம்; மாணவர்கள் தவிப்பு

சான்று வழங்குவதில் தாமதம்; மாணவர்கள் தவிப்பு

காரைக்குடி : குன்றக்குடியில் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான இ- சான்று வழங்குவதற்கு வருவாய்துறையினர் தாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. பள்ளி, கல்லுாரி சேர்க்கை மற்றும் உதவி தொகை பெறுவதற்காக மாணவர்கள் பெயரில் ஜாதி, வருவாய், இருப்பிட சான்று பெற வேண்டும். இதற்காக இ- சேவை மையங்களில் மாணவர்கள் பதிவு செய்கின்றனர். இவற்றை வி.ஏ.ஓ., ஆர்.ஐ., வழியாக தாசில்தார் வரை அனுப்பி, கையெழுத்திட்டு சான்றினை பெற வேண்டும்.ஆனால், இதற்காக குன்றக்குடி பகுதி மாணவர்கள் அலைக்கழிப்பு செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதனால், மாணவர்களின் கல்வி உதவி தொகை பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாக பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி