உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நல்லாண்டிபுரத்தில் துணைமின் நிலையம் துவக்குவதில் இழுபறி

நல்லாண்டிபுரத்தில் துணைமின் நிலையம் துவக்குவதில் இழுபறி

சிவகங்கை, : மானாமதுரை அருகே நல்லாண்டிபுரத்தில் மின்வாரிய துணை மின் நிலையம் அமைப்பதில் இழுபறி நீடிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.மானாமதுரை 220 கே.வி., துணை மின்நிலையத்தில் இருந்து மானாமதுரை, இளையான்குடி, திருப்பாச்சேத்தி, பரமக்குடி நகராட்சி எல்லையில் உள்ள மஞ்சள்பட்டினம், சிவகங்கை அருகே பெரியகோட்டை வரை உள்ள மக்களுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது.ஆட்கள் பற்றாக்குறை, மின் வினியோகம் முறையாக கிடைக்காதது குறித்து விவசாயிகள், பொதுமக்கள் புகார் தெரிவிக்க மானாமதுரை துணை மின் நிலையத்தை நாட வேண்டியுள்ளது.ஆட்கள் பற்றாக்குறையால் மின் பழுதை சரிபார்க்க ஊழியர்கள் வருவதில்லை. இதனால் கிராம மக்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 4 ஆண்டிற்கு முன்பு மானாமதுரை, இளையான்குடி, பரமக்குடியில் இருந்து 15 கி.மீ., துாரமே உள்ள நல்லாண்டிபுரத்தில் 220 கே.வி.,யில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். ஆனால், மானாமதுரை தொகுதிக்கு உட்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கண்டு கொள்ளாததால் தொடர்ந்து 4 ஆண்டிற்கு முன்பே நல்லாண்டி புரத்தில் குடியிருப்பு அருகே 4 ஏக்கர் இடம் தேர்வு செய்தும், துணை மின் நிலையம் துவக்கப்படாமல் கிடப்பில் விடப் பட்டுள்ளது.

கிராமத்தினர், விவசாயிகள் பாதிப்பு

கீழநெட்டூர் விவசாயி அய்யாச்சாமி கூறியதாவது, நல்லாண்டிபுரத்தில் துணைமின் நிலையம் அமைத்தால், அப்பகுதியை சுற்றியுள்ள 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் மின்பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.இல்லாவிடில் மானாமதுரை துணை மின்நிலையத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால், தீர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.அரசு துணை மின்நிலையத்திற்கு இடம் தேர்வு செய்த நல்லாண்டிபுரத்தில் விரைந்து துவக்கப்பட வேண்டும்.இங்கு துணை மின்நிலையம் அமைத்தால், மானாமதுரை, இளையான்குடி, பரமக்குடி ஆகிய 3 நகரங்களுக்கும் 15 கி.மீ., துாரத்தில் அமைந்துவிடும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை