உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  யூரியாவிற்கு செயற்கை தட்டுபாடு : தேவகோட்டை விவசாயிகள் புகார்

 யூரியாவிற்கு செயற்கை தட்டுபாடு : தேவகோட்டை விவசாயிகள் புகார்

தேவகோட்டை: தேவகோட்டை பகுதியில் விவசாயிகள் மழைக்காக நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருந்தனர். முதலில் பெய்த மழையின் போது நெல் விதை விதைத்தனர். தொடர்ந்து மழை பெய்யாததால் பயிர் முளைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். கவலையில் இருந்தனர். சில நாட்கள் கழித்து மழையில் மீண்டும் விதைத்து பயிர் முளைத்தது. மீண்டும் மழை இல்லை. தற்போது கன மழை பெய்யாவிட்டாலும் 40 மணி நேரம் மிதமான மழை பெய்தது. தற்போது யூரியா உரம் போடவேண்டிய காலகட்டம். ஆனால் யூரியா தாராளமாக கிடைக்காமல் செயற்கை தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் யூரியா கிடைப்பதில்லை. சில தனியார் கடைகளில் தாராளமாக கிடைக்கிறது. ஆனால் சாதாரண விவசாயிகள் யூரியா வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் கடைகளில் 45 கிலோ மூடை மானியம் போக ரூ.350க்கு விற்கின்றனர். ஆனால், யூரியாவுடன் ரூ.1,000 மதிப்புள்ள மாற்று உரத்தை கட்டாயம் வாங்க வேண்டும் என வற்புறுத்துவதாக புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து விவசாயி திருநாவுக்கரசு கூறியதாவது, யூரியா கிடைப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது. யூரியாவுடன் மாற்று உரத்தை விற்க கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அதையும் மீறி கட்டாயப்படுத்தி விற்கின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை