உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர்கள் சேர்க்கை

மாணவர்கள் சேர்க்கை

திருப்புவனம் : திருப்புவனம் பழையூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இந்தாண்டு புதிதாக ஏழு மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர்.மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் வட்டார கல்வி அலுவலர்கள் பால்பாண்டி,லதாதேவி தலைமையில் நடந்தது. தலைமையாசிரியை சாந்தி புதிய மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.* கூட்டுறவு பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடக்க கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமையிலும், வட்டார கல்வி அலுவலர் இந்திராணி, ஊராட்சி தலைவர் மந்தக்காளை முன்னிலையிலும் மாணவர் சேர்க்கை விழா நடந்தது. தலைமை ஆசிரியை பாக்கியலட்சுமி வரவேற்றார். புதிய மாணவர்கள் வரவேற்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி