உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண் பரிசோதனை முகாம்

கண் பரிசோதனை முகாம்

சிவகங்கை : நாட்டரசன்கோட்டையில் கண்ணாத்தாள் நர்சரி பள்ளி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை முகாம் நடந்தது. கே.எம்.எஸ்.சி., பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைவர் வி.கே.என்., கண்ணப்பன் துவக்கி வைத்தார்.பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமுருகன், பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி, துணை தலைவர் கார்த்திகா முன்னிலை வகித்தனர்.நல்லாசிரியர் கண்ணப்பன், ரமணவிகாஷ் பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன், நேரு யுவகேந்திரா முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஜவஹர், மாவட்ட நர்சரி பள்ளிகளின் மாவட்ட செயலர் குமார் பங்கேற்றனர்.டாக்டர் உன்னிகிருஷ்ணன் தலைமையில் குழுவினர் பரிசோதனை செய்தனர். முகாமில் 294 பேர் பங்கேற்றனர். பள்ளி நிர்வாகி பிச்சை ஏற்பாட்டை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை