உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரயில்களில் கட்டணம் குறைப்பு பயணிகள் மகிழ்ச்சி

ரயில்களில் கட்டணம் குறைப்பு பயணிகள் மகிழ்ச்சி

மானாமதுரை : மதுரை, திருச்சி, காரைக்குடி, திருநெல்வேலி, தென்காசிக்கு செல்ல ரயில் கட்டணம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா காலத்தில் பாதுகாப்பு கருதி ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தன.கொரோனா பரவல் முடிவுக்கு வந்ததும், வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அக்கால கட்டத்தில் பயணிகள் ரயில்களும், சிறப்பு ரயில்களாக மாற்றி இயக்கினர். இதனால், கட்டணமும் வெகுவாக அதிகரித்து காணப்பட்டன. இந்த நிலை கடந்த 2 ஆண்டாக நீடித்து வந்தது. இந்நிலையில் நேற்று முதல் தெற்கு ரயில்வே நிர்வாகம் ரயில் கட்டணத்தை வெகுவாக குறைத்து பழைய கட்டணத்தை வசூலிக்க தொடங்கி விட்டனர்.அதன்படி மானாமதுரை --- மதுரை கட்டணம் ரூ.30 ல் இருந்து 15 ஆகவும், பரமக்குடிக்கு ரூ.30ல் இருந்து 10 ஆகவும், திருச்சிக்கு ரூ.70 ல் இருந்து 35 ஆகவும், காரைக்குடிக்கு ரூ.40ல் இருந்து ரூ.20 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன.மதுரையில் இருந்து விருதுநகருக்கு ரூ.30ல் இருந்து 10 ஆகவும், திருச்சிக்கு ரூ.70ல் இருந்து 40 ஆகவும், திருநெல்வேலிக்கு ரூ.70 ல் இருந்து 35, தென்காசிக்கு 40 ஆக குறைந்துள்ளன.மத்திய அரசின் இத்திட்டத்தால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி