| ADDED : ஜன 14, 2024 04:43 AM
சிவகங்கை சிவகங்கை மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு கரும்பு நல்ல விளைச்சலை தந்துள்ளதால் விவசாயிகள் கரும்பை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஆண்டுத்தோறும் தை முதல் நாள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையில் கரும்புக்கு முக்கியத்துவம் உண்டு. பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்யும் வகையில் சிவகங்கை அருகே சாலுார், மலம்பட்டி, சானிப்பட்டி, பெருமாள்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் செங்கரும்பு விளைவிக்கப்படுகிறது. இந்த கரும்பு மாசி மற்றும் பங்குனி மாதங்களில் நிலங்களில் கரும்பின் கரணை வேர்ப்பகுதி நடப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. 10 மாதங்கள் வளர்ந்த கரும்புகள் அறுவடைக்கு தயாராகின்றன. இப்பகுதியில் தொடர்ந்து போதிய மழை இல்லாததால் கிணற்று பாசனம் மூலமே கரும்புகளை விளைவிக்கின்றனர். இந்த ஆண்டு பருவமழை சராசரி அளவில் பெய்ததால் கரும்பு நல்ல விளைச்சல், இங்கு விளைந்த சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டது. பெருமாள்பட்டி விவசாயி ரமேஷ் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் எங்கள் பகுதியி அதிக அளவில் கரும்பு விவசாயம் செய்கிறோம். இந்த வருடம் விளைச்சல் நன்றாக உள்ளது. கரும்புக்கு தேவையான உரம் விலை தான் கடுமையாக உயர்ந்துள்ளது. உரம், மருந்து விலை உயர்வு உள்ளிட்ட காரணத்தால் உற்பத்தி செலவு அதிகம் ஆகிறது. ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் வரை செலவாகிறது. நாளை பொங்கல் என்பதால் கரும்புகளை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு வண்டி கரும்பு 300 கரும்புகள் ரூ.4 ஆயிரத்து 500ல் இருந்து ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. நல்ல விளைச்சல் என்பதால் விலை குறைந்துள்ளதுவருகின்றனர்.