உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  வீட்டு உரிமையாளரை கட்டிப்போட்டு கொள்ளை

 வீட்டு உரிமையாளரை கட்டிப்போட்டு கொள்ளை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே காளையார்மங்கலத்தில் வீட்டின் உரிமையாளரை கட்டி போட்டு 5 பவுன் நகையை கொள்ளை அடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். காளையார்மங்கலம் புதுவளவு பகுதியை சேர்ந்தவர் முருகப்பன் 40. இவர் தாய் மீனாட்சியுடன் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு டீக்கடைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அங்கு மறைந்திருந்த முகமூடி அணிந்த 6 பேர் திடீரென முருகப்பனை தாக்கி வாயில் துணியை வைத்து கை கால்களை கட்டிப் போட்டு அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின், அவரது வீட்டில் பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் முருகப்பன் மதகுபட்டி போலீசாரிடம் புகார் அளித்தார். 4 மாதங்களுக்கு முன்பு இதே தெருவில் உள்ள 3 வீடுகளில் பித்தளை மற்றும் வெள்ளி பொருட்களை திருடர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதுவரை நடந்த 4 கொள்ளைகளிலும் ஈடுபட்ட நபர்களை போலீசார் பிடிக்க வில்லை என அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை