உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை சிலம்ப வீரருக்கு கலை இளமணி விருது

மானாமதுரை சிலம்ப வீரருக்கு கலை இளமணி விருது

மானாமதுரை : சிவகங்கை மாவட்டத்தில் சிலம்ப கலையில் சிறந்து விளங்கிய மானாமதுரை வீர விதை சிலம்ப குழுவைச் சேர்ந்த மாணவருக்கு கலை இளமணி விருது வழங்கப்பட்டுள்ளது.தமிழக அரசு கலைப்பண்பாட்டு துறை மூலம் சிறந்த கலைஞர்களுக்கான விருது வருடம்தோறும் மாவட்ட கலெக்டரால் வழங்கப்பட்டு வருகிறது.இந்தாண்டிற்கான கலை இளமணி, வளர்மணி, சுடர்மனி, நன்மணி, முதுமணி ஆகிய விருதுகளுக்காக 30 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. இதில் மானாமதுரை வீர விதை சிலம்பாட்ட குழுவை சேர்ந்த மாணவர் சிவாவிற்கு கலை இளமணி விருதை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார். விருது பெற்ற மாணவரை வீர விதை சிலம்ப ஆசிரியர் பெருமாள் மற்றும் குழுவினர், பெற்றோர்கள் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை