உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  திருப்புத்துாரில் கார்த்திகை மகாதீபம்

 திருப்புத்துாரில் கார்த்திகை மகாதீபம்

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு மகாதீபம் ஏற்றி, சிவகாமி அம்பாள் உடனாய சந்திரசேகர சுவாமி திருவீதி உலா நடந்தது. திருத்தளிநாதர் கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு நேற்று காலை 10:30 மணிக்கு சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சன்னதியில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது.சந்தனக் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. ஆதித்திருத்தளிநாதர் கோயிலில் நேற்று மாலை விநாயகர்,சுவாமி,அம்பாள் தீபாராதனை நடந்து மகாதீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள் தரிசித்தனர். தொடர்ந்து திருத்தளிநாதர் கோயிலில் சிவகாமி அம்பாள் உடனாய சந்திரசேகர சுவாமி நால்வர் எழுந்தருளினர். பின்னர் தீபாராதனை நடந்து பிரகார வலம் வந்தனர். திருநாள் மண்டபம் எதிரில் திருமண அரங்கில் எழுந்தருள, சுவாமிக்கு முன்பாக மகாதீபம் சொக்கப்பனை ஏற்றி பக்தர்கள் தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை