உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போக்சோவில் ஒருவர் கைது

போக்சோவில் ஒருவர் கைது

சிவகங்கை : சிவகங்கை அருகே மீனாட்சி புரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் 25. இவர் அடிக்கடி தனது உறவினரை பார்ப்பதற்காக திருப்பாச்சேத்தி அருகே உள்ள கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு 16 வயது சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2023 மே 8ம் தேதி அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரது வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதில் சிறுமி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவுசெய்து பாலமுருகனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை