உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் கூடுதல் கட்டடம் திறப்பு

மானாமதுரையில் கூடுதல் கட்டடம் திறப்பு

மானாமதுரை : மானாமதுரை பேரூராட்சி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நகராட்சியாக மாற்றம் செய்யப்பட்டது. பேரூராட்சி அலுவலகம் செயல்பட்ட கட்டடத்தில் நகராட்சி அலுவலகமும் செயல்பட்டது.போதுமான வசதி இல்லாததால் ரூ.1கோடி செலவில் புதிய கூடுதல் அலுவலக கட்டடம் கட்டும்பணி கடந்தாண்டு துவங்கியது. பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் ஆஷா அஜித் குத்துவிளக்கேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் தாசில்தார் ராஜா துணை தாசில்தார் உமா மீனாட்சி, நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம், கமிஷனர் ரெங்கநாயகி, பொறியாளர் சீமா, ஒப்பந்ததாரர் பாலாஜி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா அண்ணாத்துரை, ஒன்றிய கவுன்சிலர் அண்ணாத்துரை, நகரச் செயலாளர் பொன்னுச்சாமி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி