உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பழநி தைப்பூச நகரத்தார் காவடி

பழநி தைப்பூச நகரத்தார் காவடி

தேவகோட்டை: தைப் பூச விழா ஜன. 25ந் தேதி வருகிறது. இத்திருவிழாவினை ஒட்டி தேவகோட்டையில் இருந்து நகரத்தார் 45ம், முதலியார் காவடி ஒன்றும் நேற்று அதிகாலை புறப்பட்டது.காவடி கட்டப்பட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சென்று அங்கிருந்து நகரின் முக்கிய கோயில்களில் பூஜை செய்து முக்கிய வீதிகளின் வழியாக சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலை காவடிகள் அடைந்தது. அங்கு காவடிகளுக்கு பூஜை செய்யப்பட்டு நேற்று அதிகாலை 6:00 மணியளவில் பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் புறப்பட்டு சென்றனர்.காவடி முன் காவலனாக செல்லும் வேலிற்கு பக்தர்கள் வழிநெடுகிலும் பூஜை செய்தனர் நகர எல்லையில் காவடிகளுக்கு பிரியா விடை கொடுத்து நகர மக்கள் அனுப்பி வைத்தனர்.ஜன. 27 ந்தேதி மகம் நட்சத்திரத்தன்று காவடிகள் மலை ஏறி தண்டாயுதபாணி சந்நிதியில் வைத்து பூஜை செய்யப்பட்டபின் மீண்டும் நடந்தே பிப்.5ந் தேதி காவடிகள் தேவகோட்டை திரும்புகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை