உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  அஜித்குமார் மரண வழக்கில் போலீசார் ஜாமின் மனு

 அஜித்குமார் மரண வழக்கில் போலீசார் ஜாமின் மனு

மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலுக்கு பேராசிரியை நிகிதா காரில் வந்தார். காரிலிருந்த நகை திருடுபோனது. அவர் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமாரை ஜூன் 27ல் போலீசார் விசாரித்தனர். தனிப்படை போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார். இவ்வழக்கை சி.பி.ஐ.,போலீசார் விசாரிக்கின்றனர். போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன், போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டனர். விசாரணை மதுரை 5 வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது. அங்கு ராஜா, ஆனந்த், பிரபு ஜாமின் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி ஜோசப் ஜாய் விசாரித்தார். சி.பி.ஐ.,தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. நீதிபதி விசாரணையை நவ.19 க்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை