உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

சிங்கம்புணரி ; சிங்கம்புணரி மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்க முயன்றனர். ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று சிங்கம்புணரியில் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். நேற்றும் மதியம் 12:00 மணி முதல் கடைவீதியில் கட்டு மாடுகள் அவிழ்க்கப்பட்டன. மதியம் 2:30 மணிக்கு தொழுவிலிருந்து சேவுகப்பெருமாள் கோயில் மாடுகள் விடப்பட்டன. இம்மாடுகளை வீரர்களும், பார்வையாளர்களும் தொட்டு வணங்கினர். மற்ற மாடுகளை அடக்க முயன்றனர். பெரும்பாலான காளைகள் பிடிபடாமல் வெளியேறின. இதேபோல் காளாப்பூர், சூரக்குடி, பிரான்மலை, முறையூர், எஸ்.எஸ்.கோட்டையில் மஞ்சுவிரட்டு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி