உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அ.தி.மு.க.,வினர் வாகனங்களில் ஊடகம் "ஸ்டிக்கர் : அரசு நடவடிக்கை எடுக்குமா?

அ.தி.மு.க.,வினர் வாகனங்களில் ஊடகம் "ஸ்டிக்கர் : அரசு நடவடிக்கை எடுக்குமா?

சிவகங்கை : அ.தி.மு.க.,வினர் சிலர், வாகனங்களில் விதிமுறைகளை மீறி ஊடகம் 'ஸ்டிக்கர்' களை ஒட்டி செல்வதால், போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க செல்லும் போது, மக்களுக்கோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ சந்தேகம் ஏற்படாமல் இருக்க, அந்தந்த மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம், அரசு சார்பில் 'ஊடகம்' 'ஸ்டிக்கர்' வழங்கப்படும். இந்த ஸ்டிக்கர்களில் செய்தித்துறை அலுவலர்கள் கட்டாயம், நிருபர்களின் வாகன புத்தகம், லைசென்ஸ் போன்றவற்றின் நகல் பெற்று, அவர்களிடம் கையெழுத்து பெற்ற பின்னரே வழங்க வேண்டும். ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில் இந்த நடைமுறையை செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள் பின்பற்றுவதில்லை. தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கட்டுப்பாடு இன்றி 'ஸ்டிக்கர்' வழங்குகின்றனர். விதிமுறைகளை மீறி, சிவகங்கை உட்பட சில மாவட்டங்களில் அ.தி.மு.க., நிர்வாகிகளின் வாகனங்களுக்கு ஊடகம் 'ஸ்டிக்கர்' வழங்கப்பட்டுள்ளது. அக்கட்சியினர் தங்கள் வாகனங்களில் 'ஸ்டிக்கர்' களை ஒட்டிக்கொண்டு, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. செய்தித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில்,'' விதிமுறைப்படி உரிய ஆவணங்களை பெற்றுத்தான், 'ஸ்டிக்கர்' வழங்க வேண்டும். சில மாவட்டங்களில் கட்சி பிரமுகர்கள் வற்புறுத்தி கேட்பதால், சில அதிகாரிகள் அவர்களுக்கு துணை போகின்றனர். இது முற்றிலும் தவறு. அரசு தான் இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி