உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டூவீலர் கவிழ்ந்து பலி

டூவீலர் கவிழ்ந்து பலி

திருக்கோஷ்டியூர் : சிங்கம்புணரி ஒன்றியம் எஸ்.மாம்பட்டி இந்திராநகரைச் சேர்ந்தவர் கரந்தன் மகன் கரந்தமலை58. இவர் நேற்று முன்தினம் இரவு டூ வீலரில் ஹெல்மெட் அணியாமல் திருப்புத்துாருக்கு தெற்கு இளையாத்தங்குடி வி.ஏ.ஓ. ராஜசேகருடன் வந்துள்ளார். இரவு 9:30 மணிக்கு அரளிக்கோட்டை விலக்கு பாலம் அருகில் சென்ற போது டூ வீலர் கட்டுப்பாட்டை இழந்து விழுந்ததில் கரந்தமலை தலையில் காயம் அடைந்து இறந்தார். பின்னால் அமர்ந்திருந்த ராஜசேகர் திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை