உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் பராமரிப்பில்லாத நிழற்குடை கள்: பயணிகள் அவதி

சிவகங்கையில் பராமரிப்பில்லாத நிழற்குடை கள்: பயணிகள் அவதி

சிவகங்கை : சிவகங்கை நகரில் பராமரிப்பில்லாத பஸ் நிழற்குடைகளை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகங்கை நகரில் இளையான்குடி அம்பேத்கர் சிலை அருகே உள்ள பயணிகள் நிழற்குடை பராமரிப்பு இன்றி செடிகள் முளைத்து காணப்படுகிறது. இந்த நிழற்குடையில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் குடித்து விட்டு பாட்டில்களை வீசியுள்ளனர்.மானாமதுரை ரோடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பஸ் நிறுத்த நிழற்குடையும் பராமரிப்பு இன்றி இருக்கிறது முன்பகுதி முழுவதும் நிழற்குடையை மறைத்து கொடிகம்பங்களை ஊன்றியுள்ளனர், நகராட்சி நிர்வாகம் நகரில் உள்ள நிழற்குடைகளை பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை