உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  கீழடி அருகே குந்திமாநகரில் வைகுண்ட ஏகாதசி ரத்து

 கீழடி அருகே குந்திமாநகரில் வைகுண்ட ஏகாதசி ரத்து

கீழடி: கீழடி அருகே குந்திமாநகர் என அழைக்கப்பட்ட கொந்தகை தெய்வநாயக பெருமாள் கோயிலில் இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயிலைச் சேர்ந்த கொந்தகை தெய்வநாயக பெருமாள் கோயிலில் வழிபட்டால் கல்வியில் மேன்மை பெறுவார்கள் என்பது நம்பிக்கை. நம்மாழ்வாரால் அருளப்பட்ட திருவாய் மொழி திவ்ய பிரபந்தத்திற்கு உரை எழுதி திருமலையாழ்வார் அவதரித்த கிராமம் ஆகும். தென்கலை வைணவ மரபின் முதன்மை ஆச்சாரியாரான மணவாள மாமுனிகளின் குரு திருமலையாழ்வார் ஆகும், சிறப்பு வாய்ந்த தெய்வநாய பெருமாளை வழிபடுபவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள், பூர நட்சத்திரத்தன்று வழிபடுபவர்களுக்கு திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. தமிழகம் முழுவதும் பெருமாள் கோயில்களில் வரும் 30ம் தேதி செவ்வாய்கிழமை வைகுண்ட ஏகாதசி நடைபெற உள்ளது. ஆனால் கொந்தகை தெய்வநாயக பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழாவிற்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் இந்தாண்டு விழா ரத்து செய்யப் பட்டுள்ளது. எனவே சிறப்பு பூஜை, திருவீதிப்புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெறாது. காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு மட்டும் நடைபெறும் என்றும் அதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை