உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / குற்றாலம் மெயின் அருவியில் 3வது நாளாக குளிக்க தடை

குற்றாலம் மெயின் அருவியில் 3வது நாளாக குளிக்க தடை

குற்றாலம்:குற்றாலம் மெயினருவியில் ௩வது நாளாக குளிக்க தடை நீடித்தது. பழையக் குற்றாலம், ஐந்தருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு எற்பட்டது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலிஅருவி, சிற்றருவி ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில் நேற்று காலை முதலே குளிர்ந்த காற்றுடன் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. மெயினருவில் தண்ணீர் வரத்து குறையாததால் ௩வது நாளாக நேற்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.பழையக் குற்றாலம், ஐந்தருவியில் தண்ணீர் சற்று குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டது. தென்காசி, குற்றாலம், இலஞ்சி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சுரண்டை, பாவூர்சத்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !