உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / சிவகிரி அருகே தீப்பற்றி கார் சாம்பல்

சிவகிரி அருகே தீப்பற்றி கார் சாம்பல்

சிவகிரி:தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லுார் கீழத்தெருவைச் சேர்ந்த தவசி மகன் முருகன், 44. இவரும், இவரது மனைவி அன்னலட்சுமியும் குழந்தையுடன், தங்களுக்கு சொந்தமான, 'மகிந்திரா ஸ்கார்பியோ' காரில் தேனிக்கு செல்வதற்காக, மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.காரில் திடீரென புகை வந்தது. இதை கவனித்த முருகன், காரை நிறுத்தினார். காரில் இருந்து மனைவி மற்றும் குழந்தையை வெளியே வர சொன்னார். அவர்களும், காரில் இருந்து உடனடியாக இறங்கினர்.சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. கார் முழுதும் எரிந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், விரைந்து வந்து தீயை அணைத்தனர். தக்க நேரத்தில் காரில் இருந்து வெளியேறியதால், உயிர் தேசம் தவிர்க்கப்பட்டது.சிவகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை