உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / தாசில்தார் முன்னிலையில் சமாதான கூட்டத்தில் அடிதடி

தாசில்தார் முன்னிலையில் சமாதான கூட்டத்தில் அடிதடி

சங்கரன்கோவில்:தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே மேலவயலி கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோவில் உள்ளது. ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையே யார் விழா நடத்துவது என்பதில் முன்விரோதம் உள்ளது. இரு தரப்பினரும் ஒரே தேதியில் விழா நடத்த முடிவு செய்தனர். சங்கரன்கோவில் தாசில்தார் பரமசிவன் அலுவலகத்தில், இரு தரப்பையும் அழைத்து சமாதான கூட்டம் நடந்தது. நேற்று முன்தினம் பேச்சு நடந்து கொண்டிருந்த போது, தாசில்தார் முன்னிலையில், ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.அங்கிருந்த போலீசார் அவர்களை அமைதிபடுத்தியும் கேட்காமல் மோதல் தொடர்ந்தது. தாக்குதலில் காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து ஒரு தரப்பைச் சேர்ந்த வக்கீல் தேன்மொழி உள்ளிட்ட மூன்று பேர் மீது டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை