உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / டூவீலர்- லாரி மோதல்: பலி 2

டூவீலர்- லாரி மோதல்: பலி 2

தென்காசி:தென்காசி மாவட்டம் கடையநல்லுார் இடைகாலை சேர்ந்த பரமசிவன் மகன் அரவிந்த் 22. செங்கோட்டை முத்தையா மகன் ராஜு 22. இருவரும் நண்பர்கள். இடைகாலில் நடந்த கோயில் திருவிழாவில் பங்கேற்க ராஜு வந்திருந்தார். நேற்றுமதியம் இருவரும் ஒரே டூவீலரில் தென்காசி சென்று விட்டு இடைக்காலுக்கு திரும்பினர்.தென்காசி -- மதுரை சாலையில் சிவராமபேட்டை வளைவில் வந்த போது எதிரே விருதுநகரிலிருந்து கேரளாவுக்கு சென்ற சிமென்ட் லாரியும் டூ வீலரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே பலியானார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜு இறந்தார். போலீசார் விசாரித்தனர். சிவராமபேட்டை வளைவில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே சாலையை விரிவு படுத்தி சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை