உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / மத்திய அரசின் மூன்று சட்டங்களை எதிர்த்து  ரயிலை மறிக்க முயன்ற 35 வழக்கறிஞர்கள் கைது

மத்திய அரசின் மூன்று சட்டங்களை எதிர்த்து  ரயிலை மறிக்க முயன்ற 35 வழக்கறிஞர்கள் கைது

தஞ்சாவூர்:மத்திய அரசு மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை வரும் ஜூலை.1ம் தேதி அமலுக்கு கொண்டு வர உள்ளது. இந்த புதிய சட்டங்களை எதிர்த்து பல்வேறு கட்சியினரும், வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் கண்டனம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், நேற்று கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன் முன்பு, வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், சங்க தலைவர் விவேகானந்தன் தலைமையில், புதிய சட்டத்தில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிப்பில் ஈடுபட்டு வரும் மத்திய அரசைக் கண்டித்தும், சட்ட மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.இதையடுத்து, வழக்கறிஞர்கள் சிலர் தஞ்சாவூரில் இருந்து இருந்த சென்னை செல்லக்கூடிய சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிப்பதற்காக, சுற்றுசுவரை ஏறி குதித்து சென்றனர்.உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வழக்கறிஞர்களை பிடித்து சென்று வேனில் ஏற்றினர். தொடர்ந்து, கோவையில் இருந்து மயிலாடுதுறை செல்லக்கூடிய ஜனசதாப்தி, மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை செல்லக்கூடிய பயணிகள் ரயில்களை வழக்கறிஞர்கள் மறிப்பதாக தெரிவித்தனர். இதனால், ரயில்வே ஸ்டேஷன் முகப்பு பகுதி இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. ரயில் மறியலில் ஈடுபட முயன்றதாக 35 வக்கீல்கள் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பேசும் தமிழன்
ஜூன் 27, 2024 21:05

இவனுக எல்லாம் என்ன சொல்ல வருகிறார்கள்..... குண்டு வைக்கும் ஆட்களுக்கு மற்றும் ஊழல் செய்யும் ஆட்களுக்கு தண்டனை கொடுக்க கூடாது என்று கூறுகிறீர்களா ??? ஏனென்றால் அவர்கள் எல்லாம் உங்கள் கூட்டாளிகளா ???


பேசும் தமிழன்
ஜூன் 27, 2024 13:23

குண்டு வைக்கும் ஆட்களுக்கு மற்றும் ஊழல் பேர்வழிகள்களுக்கு தண்டனை கொடுக்க கூடாது என்று கூறுகிறீர்களா.. அதனால் எங்கள் ஆட்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்... அதனால் இந்த சட்டத்தை எதிர்க்கிறோம் என்று கூறுகிறீர்களா ???


மேலும் செய்திகள்





புதிய வீடியோ