| ADDED : ஜூன் 30, 2024 02:41 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர், விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உள்ளது. இங்கு தமிழ் அமைப்பினர், சுற்றுலா பயணியர் வந்து செல்வர். இந்நிலையில், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், ஜூன் 12ம் தேதி முதல் தங்கியுள்ளார்.கடந்த 22ம் தேதி மாலை தன் அறையில் துாங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் உள்ளே புகுந்து இவரது சட்டைப் பையில் இருந்த 3000 ரூபாய், மொபைல் போனை திருடி சென்றனர்.இது தொடர்பாக வழக்குப் பதிந்த போலீசார் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளைக் பிடிக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்புத் துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான நிஜாமுதீன் கோரிக்கை மனுவை போலீசாரிடம் அளித்தார்.இருப்பினும், நெடுமாறனின் மொபைல் திட்டமிட்டு திருடப்பட்டதால் தான், போலீசார் விசாரணையை துவங்க தயக்கம் காட்டுவதாக, உலக தமிழர் பேரமைப்பினர் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.