உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுகாதாரமற்ற உணவு பொருட்கள் விற்பதை தடை செய்ய மனு

சுகாதாரமற்ற உணவு பொருட்கள் விற்பதை தடை செய்ய மனு

தேனி: சிவசேனா கட்சி மாநில துணைத் தலைவர் குருஅய்யப்பன், தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் விஜயானந்திடம் வழங்கிய புகார் மனுவில்,' நோயாளிகள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் டாக்டர்கள் அனுமதி இன்றி சுகாதாரம் இல்லாத டீ, வடை, போண்டா, முருக்கு, சாப்பாடு உள்ளிட்ட உணவுப்பொருட்களை பலர் விற்பனை செய்கின்றனர். இதனால் நோயாளிகள் உடல் நலம் பாதிக்கப்படும். அனுமதி இன்றி சுகாதாரம் இல்லாமல் விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க' கோரியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ