உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரூ.40க்கு 8 வகை விதைகள் வழங்கல்

ரூ.40க்கு 8 வகை விதைகள் வழங்கல்

தேனி : தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விதைகள் வழங்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டு மாவட்டத்தில் 2500 விவசாயிகளுக்கு விதைத்தொகுப்பு வழங்க பணிகள் நடந்து வருகிறது. ஒரு தொகுப்பு ரூ.40க்கு வழங்கப்பட உள்ளது.இதில் புடலை, பூசணி, முருங்கை, ஒரு கீரை வகை, தக்காளி, கத்தரி, வெண்டி, பீர்க்கங்காய் விதைகள் கொண்ட தொகுப்பு இருக்கும். விதைகள் பெறுவதற்கு விருப்ப முள்ள விவசாயிகள் அருகில் உள்ள உதவி தோட்டக்கலை அலுவலகத்தை அணுகலாம் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை