உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்டத்தில் 22 டீ, மளிகை கடைகளுக்கு சீல்

மாவட்டத்தில் 22 டீ, மளிகை கடைகளுக்கு சீல்

தேனி : மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த டீக்கடைகள், மளிகை கடைகள் உட்பட 22 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத்துறையினர் 'சீல்' வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்ய கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. கலெக்டர் ஷஜீவனா உத்தரவில் உணவுப்பாதுகாப்புத் துறையினர், உள்ளாட்சி அமைப்புகள், போலீசார் இணைந்து அனைத்து பகுதிகளிலும் கடைகளில் சோதனை செய்து வருகின்றனர்.இதில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 22 கடைகள் கண்டறியப்பட்டன. 18 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன மீன்கள் 150 கிலோ, உணவுப்பொருட்கள் 35 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை