உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அ.ம.மு.க. வெற்றி பெறனும் ஆலோசனை கூட்டத்தில் பேச்சு

அ.ம.மு.க. வெற்றி பெறனும் ஆலோசனை கூட்டத்தில் பேச்சு

சின்னமனூர்: சின்னமனூரில் அ. ம. மு.க. தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தொகுதி பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் சண்முகவேல் தலைமை வகித்தார். அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் முத்துச்சாமி, . ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் சையது கான் , பா.ஜ. தொகுதி பொறுப்பாளர் தங்க பொன்ராஜா, சின்னமனூர் நகர் தலைவர் லோகேந்திரராஜன் மற்றும் பல்வேறு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். பேசிய அனைவரும் வரும் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். உங்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும். கடுமையாக உழைத்து வெற்றி பெற உதவுங்கள் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !