உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விலையிலும் மணக்குது மல்லிகை கிலோ ரூ.1500 க்கு விற்பனை

விலையிலும் மணக்குது மல்லிகை கிலோ ரூ.1500 க்கு விற்பனை

தேனி:தேனி பூமார்க்கெட்டிற்கு தேனியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இன்று ஆடி கடைசி வெள்ளி, நாளை ஆவணி மாதப்பிறப்பை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்தது.வியாபாரி செந்தில்குமார் கூறுகையில் 'மல்லிகை இருநாட்களுக்கு முன் கிலோ ரூ.800க்கு விற்பனைஆனது. தற்போது ரூ.1500 ஆக உயர்ந்துள்ளது. மற்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. முல்லை கிலோ ரூ.700, ஜாதிமல்லி ரூ.600, சம்மங்கி ரூ.250, அரளி, செவ்வந்தி ரூ.300, பட்டன்ரோஸ் ரூ.400, பன்னீர் ரோஜா ரூ.200, கனகாம்பரம் ரூ.ஆயிரம், கோழிகொண்டை ரூ. 80, செண்டு பூ ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனையாகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்