உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியகுளத்தில் டூவீலரில் கஞ்சா கடத்தியவர் கைது

பெரியகுளத்தில் டூவீலரில் கஞ்சா கடத்தியவர் கைது

பெரியகுளம்: பெரியகுளம் ஆஞ்சநேயர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜபாண்டி 24. ஆண்டிபட்டி தாலுகா மூலக்கடையைச் சேர்ந்த இவரது நண்பர் பணப்பாண்டி 24. நேற்று முன்தினம் இரவு கும்பக்கரை ரோட்டில் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். கும்பக்கரை பகுதியில் கஞ்சா கடத்துவதாக வடகரை எஸ்.ஐ., மலரம்மாளுக்கு தகவல் வந்தது. போலீசாருடன் கும்பக்கரை ரோடு குடமுருட்டி பாலம் அருகே சோதனை நடத்தினார். இதில் ராஜபாண்டியிடம் 80 கிராம் மதிப்புள்ள 13 கஞ்சா பொட்டலம், டூவீலர் கைப்பற்றப்பட்டது. தப்பியோடிய பணப்பாண்டியை போலீசார் தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி