உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி, போடியில் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி, போடியில் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

போடி: போடி பகுதியில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் இருந்தது. மாலை 6:15 மணிக்கு போடி, குரங்கணி, கொட்டகுடி, சிலமலை, சூலப்புரம், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதியில் பெய்த கன மழையால் பூமி குளிர்ச்சி அடைந்தது. போடி காமராஜ் பஜார், போஜன் பார்க் உள்ளிட்ட மெயின் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து சென்றது. மலைப் பகுதியில் பெய்த கன மழையால் கொட்டகுடி ஆற்று பகுதியில் நீர் பெருக்கெடுத்து ஓட வர துவங்கியது. மாலையில் பெய்ய துவங்கிய கன மழையானது இரவு 7:30 மணிக்கு மேலும் நீடித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தேனி: தேனியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆடி காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. பகலில் பல இடங்களில் துாசியுடன் மணலும் சேர்ந்து வீசியதால் வாகன ஓட்டிகள், ரோட்டில் நடந்து சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். மாலையில் பெய்த சாரல் மழை இரவு 8:00 மணி வரை நீடித்தது. இதனால் பலர் நனைந்தவாறு சென்றனர். சில நாட்களாக காற்று மட்டும் வீசி வந்த நிலையில், நேற்று மாலையில் நகர்பகுதியை சாரல் மழை குளிர்வித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை