உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுவர்களில் சின்னம் வரைவதில் கட்சிகளிடம் ஆர்வம் இல்லை

சுவர்களில் சின்னம் வரைவதில் கட்சிகளிடம் ஆர்வம் இல்லை

கம்பம்: லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.வேட்பாளர்கள் முழு வீச்சில் களம் காண வியூகம் வகுத்து வருகின்றனர். தேர்தல் பரப்புரையில் சுவர்களில் சின்னங்கள் வரைவது கட்சிகளின் பிரதான பணியாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முந்தைய தேர்தல்களில் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பே சுவர்களில் ரிசர்வ் என்று எழுதி இடம் பிடிப்பார்கள்.ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அதற்கு காரணம் தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கைகள் தான். பேரூராட்சிகள் , நகராட்சிகளில் சுவர்களில் சின்னங்கள் வரைவது தடை செய்யப்பட்டு விட்டது. கிராமங்களில் வரைந்து கொள்ளலாம்.சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளரின் சம்மத கடிதம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.இதில் யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது. செயலி ஒன்றில் விண்ணப்பத்தை அப்லோடு செய்ய கூறுகின்றனர். இந்த சிக்கல்களை நினைத்து இதுவரை யாருமே விண்ணப்பிக்கவில்லை.இதனால் பேரூராட்சி, நகராட்சி போன்று ஊராட்சிகளிலும் சுவர்கள் பளீச் என்று உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை