| ADDED : ஜூலை 01, 2024 06:04 AM
தேனி : வைகை அணை அருகே உள்ள பிக்அப் அணையில் ஷட்டர் பராமரிப்புப் பணி நடப்பதால் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இரு நாட்களுக்கு குடிநீர் வினியாகம் ரத்து செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வைகை அணை அருகே உள்ள பிக் அப் அணையில் இருந்து மதுரை, உசிலம்பட்டி, சேடபட்டி, ஆண்டிப்பட்டி, தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பிக் அப் அணையில் உள்ள ஷட்டர்கள் பராமரிப்புப் பணி, துார்வாரும் பணியை பொதுப்பணித் துறையினர் துவங்கி உள்ளனர். இதனால் பிக் அப் அணையில் குடிநீருக்காக தேக்கி வைக்கப்பட்டிருந்த நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.பிக் அப் அணையில் நீர் வெளியேற்றப் பட்டுள்ளதால் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இன்றும், நாளையும் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என, நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.