| ADDED : ஏப் 28, 2024 04:23 AM
பெரியகுளம், : பெரியகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவுப்படி, ரூ.25 லட்சம் செக் மோசடியில் ஈடுபட்ட முருகேசன் மீது வடகரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.எ.புதுக்கோட்டை முருகமலை நகரை சேர்ந்தவர் சோலையப்பன் 53. இவருக்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் வடகரை எல்.ஜி.ஜி.எஸ்., காலனி முருகேசனுடன் 65, பழக்கம் ஏற்பட்டது. சென்னையைச் சேர்ந்த மோகன், பெங்களூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு பாத்தியப்பட்ட சொத்துக்கள் தனது பொறுப்பில் இருப்பதாக முருகேசன், சோலையப்பனிடம் ஆசை வார்த்தை கூறி அதனை விற்று தருவதாக ரூ.25 லட்சம் பெற்று ஏமாற்றி உள்ளார். பெரியகுளம் வடகரை போலீஸ் ஸ்டேஷனில் முருகேசன் மீது சோலையப்பன் புகார் அளித்தார். இதற்கு முருகேசன் மகன் மூலம் மூன்று காசோலைகள் சோலையப்பனிடம் வழங்கப்பட்டன. ஆனால் அந்த காசோலைகளும் வங்கியில் முருகேசன் கணக்கில் பணம் இல்லாததால் திரும்பியது. சோலையப்பன் காசோலை மோசடி குறித்து பெரியகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. நீதிமன்ற உத்தரவில் வடகரை எஸ்.ஐ., பிரேம் ஆனந்த், முருகேசன் மீது 'செக்' மோசடி வழக்கு பதிவு செய்தார்.