உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தபால் நிலையங்களில் புனித கங்கை நீர் விற்பனை

தபால் நிலையங்களில் புனித கங்கை நீர் விற்பனை

தேனி: தேனி தபால் கோட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் நாளை ஆடி அமாவாசையை முன்னிட்டு புனித கங்கை நீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதால் அவற்றை ரூ.30க்கு பெற்று கொள்ளலாம்.' என, கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: போடி, பெரியகுளம் தலைமை தபால் நிலையங்கள், தேனி, ஆண்டிபட்டி, கம்பம், சின்னமனுார், உத்தமபாளையம் ஆகிய துணை தபால் நிலையங்களில் புனித கங்கை நீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. புனித கங்கை நீர் ஒரு பாட்டில் விலை ரூ.30. உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரி மலையில் இருந்து புனித கங்கை நீரை எடுத்து, சுத்திகரிப்பு செய்து இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியை தபால்துறை செய்து வருகிறது. புதுமனை புகுவிழா, புதிய தொழில் துவங்குதல், சுப நிகழ்ச்சிகளுக்கு இந்த புனித கங்கை நீரை மக்கள் பலரும் வாங்கி பயன்படுத்துகின்றனர். நாளை ஆக., 4 ஆடி அமாவாசையை முன்னிட்டு குச்சனுார் சுயம்பு சனீஸ்வரர் கோயில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், உத்தமபாளையம் ஞானாம்பிகை கோயில் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு ஸ்டால்கள் திறக்கப்பட்டு புனித கங்கை நீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்கள் இச்சேவையை பயன்படுத்தி பயன் பெறலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை