உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியாறு அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தம் -குடிநீருக்கு 105 கனஅடி திறப்பு

பெரியாறு அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தம் -குடிநீருக்கு 105 கனஅடி திறப்பு

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 105 கன அடி திறக்கப்பட்டுள்ளது.முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. இது தவிர மதுரை, மேலூர், பேரணை பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் ஒருபோக சாகுபடி நிலங்கள் உள்ளன.பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாம் போக நெல் அறுவடை மும்முரமாக நடந்துவரும் நிலையில் தற்போது தண்ணீர் தேவையில்லை. தற்போது நிலவும் கடும் வெப்பத்தால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இந்நிலையில் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நேற்று காலை 6:00 மணிக்கு நிறுத்தப்பட்டது. குடிநீருக்காக மட்டும் 105 கன அடி நீர் குமுளி மலைப் பாதையில் உள்ள இரைச்சல் பாலம் வழியாக வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 116.60 அடியாக உள்ளது (மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 2015 மில்லியன் கன அடியாகும்.அணையில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஏப்ரல், மே மாதங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறும். மீண்டும் ஜூனில் அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் போது மின் உற்பத்தி மீண்டும் துவங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை