உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தக்காளி கிலோ ரூ.40 ஆக உயர்வு; தொடர் மழையினால் வரத்து குறைவு

தக்காளி கிலோ ரூ.40 ஆக உயர்வு; தொடர் மழையினால் வரத்து குறைவு

தேனி: மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் தக்காளி வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிலோ ரூ.40 ஆக உயர்ந்துள்ளது.மாவட்டத்தில் தக்காளி 59 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக தக்காளி ரூ. 10 முதல் ரூ.25 வரை விற்பனையானது. இந்நிலையில் மாவட்டத்தில் இரு வாரங்களாக பெய்யும் தொடர் மழையால் காய்கறி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. மே 14 வரை கிலோ ரூ.15 முதல் ரூ.18 வரை விற்பனையான தக்காளி, இரு நாட்களாக ரூ.33 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது.மாவட்டத்தில் செயல்படும் மொத்த காய்கறி மார்க்கெட்டுகளில் 15கிலோ எடை கொண்ட தக்காளிபெட்டிகள் ரூ.300 முதல் ரூ.380 வரை விற்பனை ஆகிறது. இதனால் சில்லரை விற்பனையும் எகிற துவங்கி உள்ளது.தற்போது மழையினால் பல இடங்களில் செடிகள், அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் வரத்து குறைந்து விலை உயர துவங்கி உள்ளது. ஆனாலும் தமிழகத்திற்கு கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தக்காளிகள் வருவதால் விலை உயர்வு கட்டுக்குள் உள்ளது. மழை நீடித்தால் தக்காளி மேலும் விலை உயர வாய்ப்புள்ளது.என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை