உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சூறைக்காற்றுடன் பெய்த மழை

சூறைக்காற்றுடன் பெய்த மழை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை ஒரு மணி நேரம் நீடித்தது.ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து மழை பெய்துள்ளது. மழையால் குளங்கள், கண்மாய்களுக்கு நீரவரத்து இல்லை. ஆங்காங்குள்ள பள்ளங்களில் நீர் தேங்கியுள்ளன. விவசாய நிலங்களின் ஈரப்பதத்தை மானாவாரி, இறவை பாசன நிலங்களை விவசாயிகள் விதைப்புக்கு தயார் படுத்தி உள்ளனர். நேற்று காலை முதல் மதியம் வரை இருந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்தது.மாலை 4:30 மணிக்கு சூறைக்காற்று சாரலுடன் துவங்கிய சாரல் மழை பலத்த மழையாகி ஒரு மணி நேரம் வரை நீடித்தது. மழையால் ஆங்காங்குள்ள சிற்றோடைகளில் நீர்வரத்து ஏற்பட்டது.மழையால் ஆண்டிபட்டியில் குளிர்ச்சியான சீதோஷ்ன நிலை ஏற்பட்டதால் பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ