உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

தேனி : லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடக்கிறது. இதற்காக ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி ஆண்டிப்பட்டி, தேனி, வீரபாண்டி, போடி, உத்தமபாளையம் பகுதிகளில் நடந்தது. இதில் பங்கேற்க 6100 ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஸ்மார்ட் டி.வி.,கள் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டது. ஓட்டுச்சாவடி முதன்மை கண்காணிப்பாளர், ஓட்டுப்பதிவு அலுவலர்கள் நிலை 1,2,மற்றும் 3 என தனித்தனியாக பயிற்சிகள் வழங்கப்பட்டது.பயிற்சியில் பங்கேற்ற சில அலுவலர்கள் கூறியதாவது, பயிற்சியில் டி.வி., மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டது. அதே போல் முதன்மை அலுவலர்கள், ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு தனித்தனியாக பயிற்சிகள் வழங்கப்பட்டது. ஓட்டுப்பதிவு இயந்திரங்களை இயக்குவது, அதில் பிரசனைகள் ஏற்பட்டால் தீர்வு காண்பது பற்றி பயிற்சி வழங்கி இருக்கலாம். ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் இயந்திரங்களை ஒப்படைக்கும் போது அதனுடன் படிவங்கள் பூர்த்தி செய்வதில் பல அலுவலர்கள் சிரமமடைகின்றனர். இதனை தவிர்க்க மாதிரி படிவங்கள் வழங்கி பூர்த்தி செய்ய பயிற்சி வழங்க வேண்டும். என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ