உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூணாறு ஊராட்சி மாஜி செயலர் மீது விஜிலன்ஸ் விசாரணை

மூணாறு ஊராட்சி மாஜி செயலர் மீது விஜிலன்ஸ் விசாரணை

மூணாறு: மூணாறு ஊராட்சியில் பல்வேறு திட்டங்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததால் 'மாஜி' செயலர் சகஜனுக்கு எதிராக விஜிலன்ஸ் விசாரணை துவங்கியது.மூணாறு ஊராட்சியில் செயலராக பணியாற்றிய சகஜன் கடந்த பிப்., 29ல் பணி ஓய்வு பெற்றார். அவர் ஊராட்சியில் பணியாற்றியபோது மூணாறை அழகு படுத்துதல், கழிவு நீர் சுத்திகரிப்பு உள்பட ஏழு திட்டங்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.அது குறித்து விஜிலன்ஸ் விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி குழு முடிவு செய்தது.தற்போதைய செயலர் அபிலாஷ் (பொறுப்பு) விஜிலன்ஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன்படி தொடுபுழா விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரணையை துவக்கினர்.கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டத்தில் முதல்கட்ட பணிகள் நடந்த நிலையில் திட்டம் செயல்படுத்த இயலாத நிலை ஏற்பட்டது. எனினும் ஒப்பந்ததாரருக்கு நிதி வழங்கப்பட்டது. அதன் மூலம் அரசு நிதி வீணடிக்கப்பட்டது. தவிர பல்வேறு பணிகளுக்கு நிதி வழங்கப்பட்ட போதும், அது குறித்து தகவல்கள் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டதால் சகஜன் கலக்கம் அடைந்தார். அதனால் 'நான் குற்றமற்றவன்' என ' வாட்ஸ் அப்' பில் பதிவிட்டு புலம்பி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை