உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேரளாவில் வேலை நேர மாற்றம் மலை பகுதிகளுக்கும் பொருந்தும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் தகவல்

கேரளாவில் வேலை நேர மாற்றம் மலை பகுதிகளுக்கும் பொருந்தும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் தகவல்

மூணாறு: 'மாநிலத்தில் வேலை நேரத்தில் ஏற்படுத்திய மாற்றம் மலையோரப் பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.' என, தொழிலாளர் நலத்துறை ஆணையர் அர்ஜூன்பாண்டியன் தெரிவித்தார்.கேரளாவில் வெப்பம் நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் நிலையில் வெயிலில் பணிபுரியும் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நிபந்தனைகளுடன் வேலை நேரத்தில் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. அதன் படி சுட்டெரிக்கும் வெயிலில் பணியாற்றும் தொழிலாளர்கள் மே 15 வரை பகல் 12:00 மணி முதல் 3:00 மணி வரை பணியை தவிர்க்குமாறும் அதனை மீறி பணியில் ஈடுபடுத்தும் நிறுவனம், உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவில் கூறப்பட்டது. இந்த நிபந்தனை கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் உள்ள பகுதிகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் வேலை நேரத்தில் செய்த மாற்றம் மலையோரப் பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தும் என தொழிலாளர் நலத்துறை ஆணையர் அர்ஜூன்பாண்டியன் தெரிவித்தார்.அவர் கூறுகையில், 'மலையோரப் பகுதிகளில் பகல் 12.00 முதல் 3.00 மணி வரை தொழிலாளர்கள் வெயிலில் வேலை செய்வதாக கண்டறியப்பட்டால், தோட்ட நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதனை கண்காணிப்பதற்கு மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரி, உதவி அதிகாரிகள் ஆகியோர் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் நாட்களில் கட்டுமானம், ரோடு பணி, தோட்ட பகுதிகள் ஆகியவற்றில் பரிசோதனை தீவிரமாக நடத்தப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை