உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம் நகராட்சிகளாக தரம் உயர்கிறது! மக்கள் தொகை, வரிவருவாய் அடிப்படையில் தேர்வு

ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம் நகராட்சிகளாக தரம் உயர்கிறது! மக்கள் தொகை, வரிவருவாய் அடிப்படையில் தேர்வு

தேனி : மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம் பேரூராட்சிகள் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது. மக்கள் தொகை, வரிவருமானங்கள் அடிப்படையில் இந் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள் உள்ளன. தற்போதுள்ள 22 பேரூராட்சிகளில் ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம் பேரூராட்சிகள் மற்ற பேரூராட்சிகளை விட பரப்பளவு, மக்கள் தொகையில் பெரியதாகும். இரு பேரூராட்சிகளிலும் 18 வார்டுகள் உள்ளன.ஆண்டிப்பட்டி பேரூராட்சி 5 சதுர கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது. இதில் சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதில் உள்ள 131 தெருக்களில் 31ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்த பேரூராட்சி வழியாக கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை செல்வதால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அதிகளவில் காய்கறி விளையும் பகுதியாக உள்ளது. மேலும் மாவட்டத்தில் ரயில் வசதி உள்ள பேரூராட்சியாக உள்ளது.அதே போல் உத்தமபாளையம் பேரூராட்சியில் 9 சதுர கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது. 121 தெருக்களில் 32,400 பேர் வசிக்கின்றனர். இப்பேரூராட்சி திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் முக்கிய நகரமாக திகழ்கிறது. மாவட்டத்தின் முக்கிய வேளாண் பகுதியாக உத்தமபாளையம் விளங்குகிறது. முக்கிய நகரங்களாக திகழும் ஆண்டிபட்டி, உத்தமபாளையம் பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்ந்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. இரு பேரூராட்சிகளையும் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது.பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது, நகராட்சி தரம் உயர மக்கள் தொகை 30 ஆயிரத்திற்கும் மேல் இருக்க வேண்டும். பேரூராட்சிக்கு ஆண்டு வரி வருமானம் ரூ.50லட்சத்திற்கும் மேல் இருக்க வேண்டும். உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன. ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம் பேரூராட்சிகள் மக்கள் தொகை, வரி வருவாய் குறிப்பிடப்பட்டுள்ளதை விட அதிகம் உள்ளதால் நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகராட்சியாக தரம் உயர்த்தினால் அடிப்படை வசதிகள், நகர் பகுதியில் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். சுகாதாரம், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்டவற்றில் நிறைவு பெறும். மேலும் நிர்வாகம், பொறியியல், சுகாதரம் போன்வற்றை கவனிக்க தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவதால் மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும். வார்டுகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை