| ADDED : நவ 22, 2025 03:39 AM
தேனி: மாநில கலைத் திருவிழா போட்டிகள் நவ.,25, 26, 27, 28 ஆகிய 4 நாட்கள் கரூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சேலம் மாவட்டங்களில் நடக்க உள்ளது. இதில் தேனி மாவட்ட மாணவ, மாணவிகள் 401 பேர் தேர்வாகினர். இவர்கள் போட்டியில் பங்கேற்க பஸ்களில் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். தேனி மாவட்ட பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் மாவட்ட கலைத் திருவிழா போட்டிகள் நடந்தன. அதில் முதலிடம் பெற்ற 401 மாணவ, மாணவிகள் மாநில போட்டிக்கு தேர்வாகினர். கரூர் மாவட்டம் சாரதா மகளிர் கல்லுாரியில் நவ.,25ல் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அதியமான் பொறியியல் கல்லுாரியில் 6ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு மாணவர்கள் நவ.,26லிம், புதுக்கோட்டை மாவட்டம் ஜே.ஜே., கலை கல்லுாரியில் 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்ப மாணவர்கள் நவ.,27 ல் நடக்கும் போட்டிகளிலும், நவ. 28 ல் சேலம் பத்மாவதி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் பிளஸ் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்கள் என மொத்தம் 401 பேர் மாநில கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்க செல்ல உள்ளனர். இவர்களை 4 மாவட்டங்களுக்கு வாகனங்களில் அழைத்து செல்லும் ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது. மாநில கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலையரசன் பட்டம் வழங்கி அவர்களை வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.